வவுனியாவில் உடைந்து விழும் நிலையில் மின்சார தூண்கள் : அச்சத்தில் மக்கள்!!

1463

மின்சார தூண்கள்..

வவுனியா குழுமாட்டுச்சந்தி – மரக்காரம்பளை வீதி 3.40 கிலோமீற்றர் தூரத்திற்கு அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையின் காரணமாக வீதியோர பழமையான மின்சார தூண்கள் உடைந்து விழும் நிலமையில் காணப்படுகின்றது.

வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபையினரினால் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியுடான இரண்டாவது ஒருங்கிணைக்கப்பட்ட வீதி முதலீட்டுத்திட்டத்தின் கீழ் சீன அரச கட்டுமாக பொறியியல் நிறுவனத்தினால் 3.40 கிலோ மீற்றர் நீளமான குழுமாட்டுச்சந்தி – மரக்காரம்பளை வீதி செப்பனிடப்படும் பணிகள் கடந்த 2020.03.10 அன்று தொடக்கி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் இவ் அபிவிருத்தி பணியின் போது பயன்படுத்தப்படும் வீதியில் மண், கற்களை அழுத்தும் இயந்திரத்தின் செயற்பாட்டின் போது வீதியோர பழமையான மின்சார தூண்கள் உடைந்து விழும் நிலையில் காணப்படுவதுடன் சில தூண்கள் பாதையிலும் காணப்படுகின்றன.

பல தூண்களின் கம்பிகள் வெளியே தெரிவதினால் அதனூடாக மின்சாரம் தாக்கும் ஆபாயமும் ஏற்பட்டுள்ளதுடன் மரத்தூண்கள் சரிவடையும் நிலையிலும் காணப்படுகின்றனது.

இதன் காரணமாக அவ் வீதியூடாக பயணிக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட பிரதான மின் பொறியிலாளர் திருமதி மைதிலி தயாபரன் அவர்களை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினாவிய போது,

இவ்விடயம் தொடர்பில் இது வரையில் எமக்கு எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லை.விரைவில் இது தொடர்பில் ஆராய்ந்து தீர்வினை வழங்குவதாக தெரிவித்தார்.

மின்சார தூண்கள் வீழ்ந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் முன்னர் இதற்கு தீர்வு கிடைக்குமா?