வவுனியா தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்துவரப்பட்ட பொதுமக்கள்!!

914


தனிமைப்படுத்தல் மையத்திற்கு..


வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொவிட்19 சந்தேக நபர்கள் 91 பேர் அழைத்து வரப்பட்டனர்.வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தேசிய கல்வியற்கல்லுாரி கொவிட்19 தனிமைப்படுத்தல் மையமாக அண்மையில் மாற்றப்பட்டிருந்தது.


இந் நிலையில் கம்பகா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 91 பேர் குறித்த மையத்திற்கு இன்று இரவு 7 மணியளவில் அழைத்து வரப்பட்டனர்.


அவர்கள் இராணுவ பாதுகாப்புடன் 03 பேருந்துக்களில் அழைத்து வரப்பட்டதுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.