வவுனியாவில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 50 பேர் விடுவிப்பு!!

1081

50 பேர் விடுவிப்பு..

வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டு வவுனியா – பம்பைமடு இராணுவ முகாமில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 50 பேர் இன்றைய தினம் தமது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர்.

வெளிநாட்டிற்கு தொழில் பெற்று சென்று நாட்டிற்குத்திரும்ப முடியாமலிருந்த டுபாய், ஜோர்தான் நாடுகளிலிருந்து 105 பேர் அண்மையில் இலங்கைக்கு விஷேட விமானத்தில் அழைத்து வரப்பட்டு பம்பைமடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இதில் இன்று 50 பேர் தங்களது தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்டு வெளியேறும் நிகழ்வு இராணுவத்தினரினால் எற்பாடு செய்யப்பட்டது.

இவ்வாறு 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்ட கொழும்பு, மாத்தறை , பொலனறுவை, எம்பிலிப்பட்டிய போன்ற பகுதிகளை சேர்ந்தவர்களே தன்மைப்படுத்தலை நிறைவு செய்து கொண்ட சான்றிதழ் வழங்கப்பட்டு வெளியேறியுள்ளனர்.

தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்கள் கருத்து தெரிவிக்கையில், வெளிநாட்டிலிருந்து வருகை தந்தபோதிலும் அச்ச நிலை காணப்பட்டது. எனினும் அரசாங்கம் இராணுவத்தினரின் அரவணைப்பு தனிமைப்படுத்தலை அச்சமின்றி நிறைவேற்றி கொண்டதாகவும் வெளிநாடுகளிலிருக்கும் ஏனைய இலங்கையர்களும் இலங்கைக்கு வருகை தருவதுடன் அச்சமின்றி தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொள்ள முடியும் என்றும் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்ட மேலும் 55 பேர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.