சமையலறையின் சிங்க்கில் சிறுநீர் கழித்த ஊழியரால் பரபரப்பு!!

309

அமெரிக்காவில் சமையலறையின் சிங்க்கில் ஊழியர் ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மேற்கு விர்ஜீனியாவில் சார்ஸ்ன் நகரில் பீட்சா கடை ஒன்று உள்ளது. இந்த கடையை சேர்ந்த ஊழியர் ஒருவர் சமையலறையின் சிங்க்கில் சிறுநீர் கழித்து விட்டார்.

இந்த செயல் ரகசிய கமராவில் பதிவானதால் உடனடியாக அவரை பணிநீக்கம் செய்து விட்டனர். இந்த கொடுமை என்னவென்றால் சிறுநீர் கழித்தவர் அந்த கடையின் முகாமையாளர் என்பதுதான்.

இதுகுறித்து பீட்சா நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த வீடியோ காட்சியைப் பார்த்ததும் அந்த ஊழியர் நீக்கப்பட்டு விட்டார், கடையும் காலவரையின்றி மூடப்பட்டு விட்டது என்று தெரிவித்துள்ளார்.

U1 U2 U3