நடிகையிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட வாலிபர்!!(படங்கள்)

709

அவுஸ்திரேலியாவில் பிரபல நடிகையிடம் பாலியல் குறும்பில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரை சேர்ந்தவர் நடிகை ஷாரா ஐலாந்து(23). இவர் நடித்த மாடன் பேமலி என்ற நகைச்சுவை தொடர் மிகவும் பிரபலமாகும்.

சமீபத்தில் சக நடிகை, நடிகர்களுடன் அவுஸ்திரேலியா சென்றார், அங்கு சிட்னியில் பிரபல ஹோட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அப்போது 29 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், நடிகையிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முயன்றுள்ளார். உடனே ஷாரா தனது பாதுகாப்பாளரிடம் இதுகுறித்து முறையிடவே, குறித்த வாலிபரை மடக்கி பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர்.

இவரை கைது செய்த நியூவேல்ஸ் பொலிசார், வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுபற்றி பொலிஸ் அதிகாரி கூறுகையில், கைது நடவடிக்கைக்கு பிறகு அந்த 29 வயது இளைஞரை பிணையில் விடுவித்து விட்டோம், மார்ச் 14ம் திகதி அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால், ரசிகருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

A1 A2 A3 A4