வவுனியாவில் 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் வெற்றிக் கொண்டாட்டம்!!

1599

வவுனியாவில்..

20 ஆவது திருத்தச் சட்ட மூலம் இன்று (22.10.2020) நாடாளுமன்றத்தில் 91 மேலதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது. ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில் 91 மேலதிக வாக்குகளை பெற்று 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து இரவு 8.10 மணியளவில் வவுனியா கண்டி வீதியில் பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்களினால் பட்டாசு கொழுத்தப்பட்டதுடன் இனிப்புப்பொருட்களும் வழங்கி வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதில் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை தலைவர் வசந்த, ஆதரவாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.