வவுனியாவில் இலவச யோக வாழ்வு பயிற்சி ஆரம்பம்!!

1181


யோகா..


பழங்காலத்திலிருந்தே குருகுலக் கல்வி முறையில் கற்பிக்கப்பட்டு வருகின்ற யோகாவானது மனதினைக் கட்டுப்படுத்தும் ஒரு முறையாகவும் பேணப்பட்டு வந்திருக்கின்றது.மனதினைப் பற்றிய விரிவான ஆராய்ச்சியும் மன ஆற்றலால் உண்டாகின்ற பல்வேறுபட்ட சாதனைகளும் மனம் , உடல், செயலுணர்வுகளின் கட்டுப்பாடு மற்றும் இயற்கைக்கும் மனிதனுக்குமான ஒத்திசைவு முதலியனவும் இணைந்தவொரு உருவாக்கமாக யோகதத்துவம் உள்ளது.


இதன் விளைவாக யோக தத்துவத்தினை ‘மன விஞ்ஞானம்’ (Science of mind) எனச் சுட்டித்துக் கூறுவர். அந்த வகையில் இலவச யோக வாழ்வு பயிற்சியினை வவுனியா மாவட்ட மக்களுக்கும் வழங்க வேண்டும் என்ற நோக்கில் என வவுனியா மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் அனுசரணையுடன் கிரியா பாபாஜி நிறுவனத்தினர் முன்னெடுத்துள்ளனர்.


அதன் முதற்கட்டமாக வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தில் இன்று (25.10) காலை யோக வாழ்வு பயிற்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது. யோக வாழ்வு பயிற்சி வகுப்பில் சமய ஆர்வளர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு பயனடைந்திருந்தனர்.