வவுனியா ஏ9 வீதியில் விபத்து : ஒருவர் காயம்!!

1403


விபத்து..


வவுனியா ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக இன்று (26.10.2020) காலை 9 மணியளவில் டிப்பருடன் பேரூந்து மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இவ்விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,வவுனியாவிலிருந்து ஏ9 வீதியூடாக ஒமந்தை நோக்கி டிப்பர் வாகனம் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் திடீரேன மோட்டார் சைக்கில் ஒன்று நகரசபை வீதியிலிருந்து ஏ9 வீதிக்கு ஏற முற்பட்டுள்ளது.


அந்த சமயத்தில் சடனாக டிப்பர் வாகனம் பிரேக் பிரயோகித்த சமயத்தில் டிப்பருக்கு பின்பக்கமாக வந்த கண்டி- யாழ்ப்பாணம் வழித்தட இ.போ.ச பேரூந்து டிப்பரின் பின்பகுதியில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.


இவ்விபத்தில் இ.போ.ச பேரூந்தின் முன்பகுதி பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பேருந்தில் பயணித்த பயணியோருவரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.