வவுனியாவில் முகக்கவசம் அணியாத மக்களை எச்சரிக்கும் நடவடிக்கையில் பொலிஸ்!!

1972

முகக்கவசம்..

உடல்நிலையில் கவனம் கொள்ள வேண்டியவர்கள் மட்டுமே உபயோகித்துக் கொண்டிருந்த முகக்கவசம், தற்போது உலகளவில் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது.

கொரோனா வைரஸிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்கிறார்கள்.

இலங்கையில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியுமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும் பொரும்பாலான மக்கள் அரசாங்கத்தின் உத்தரவினை பொருட்படுத்தாது முகக்கவசம் அணியாது பயணிக்கின்றனர்.

இதனையடுத்து வவுனியா மாவட்ட கொரோனா தடுப்பு பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.பி.குறுசிங்க அவர்களின் தலைமையிலான பொலிஸார் இன்று (26.10.2020) வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக முகக்கவசம் அணியாது செல்பவர்களை எச்சரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு முகக்கவசம் அணியாது செல்வர்களை எச்சரிப்பது மாத்திரம் அல்லாது அவர்களது வாகனத்தினை அவ்விடத்திலேயே நிறுத்தி விட்டு முகக்கவசத்தை வாங்கி அணிந்து வந்து வாகனத்தினை எடுத்துச்செல்லுமாறும் பொலிஸார் பொதுமக்களுக்கு பணிப்புரை விடுத்தனர்.

பொலிஸாரின் இச் செயற்பாடு வவுனியா மக்கள் மத்தியில் பாரிய வரவேற்பினை பெற்றுள்ளது.