வவுனியா ஓமந்தை நொச்சிக்குளம் கனிஷ்ட வித்தியாலயத்தின் அபிவிருத்தி குழுக்கூட்டம்!!(படங்கள்)

1295

வவுனியா, ஓமந்தை -நொச்சிக்குளம் இலக்கம் 1 கனிஷ்ட வித்தியாலயத்தின் அபிவிருத்தி குழுக்கூட்டம் அதிபர் ஜெயக்குமார் தலைமையில் நேற்று (23.02) காலை 10 மணியளவில் நடைபெற்றது.

பாடசாலையின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக இக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், மாணவர் எண்ணிக்கை அதிகரித்தலுடன் அவர்களின் கற்றல் செயற்பாட்டின் வினைத்திறனை அதிகரிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இக் கூட்டத்திற்கு வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தலைவர் சிவலிங்கம் , கிராம அலுவலர் மார்க்கண்டு மற்றும் புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரும், மத்திய குழு உறுப்பினருமான திரு.கந்தையா சிவநேசன் (பவன்), புளொட் முக்கியஸ்தரும், முன்னாள் வவுனியா உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) வவுனியா கிளையைச் சேர்ந்தவரும், கோவில்குளம் இளைஞர் கழக ஆலோசகருமான திரு.எம்.கண்ணதாசன், கோவில்குளம் கழக இணைப்பாளர் காண்டீபன் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் நலன்விரும்பிகள் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

123456