இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய மீதான தடை நீக்கம்!!

346


சனத் ஜயசூரிய..


இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்காலம் நேற்றுடன் பூர்த்தியாகின்றது.சர்வதேச கிரிக்கட் பேரவையினால் சனத் ஜயசூரியவிற்கு எதிராக இரண்டாண்டு காலம் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை நீங்குவதாக சர்வதேச கிரிக்கட் பேரவையினால் நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கிரிக்கட் விளையாட்டு தொடர்பான எந்தவொரு விடயத்திலும் பங்கேற்கக் கூடாது என்ற அடிப்படையில் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


தற்பொழுது இந்த இரண்டாண்டு கால தடை நீக்கப்பட்டுள்ளதனால் சனத் ஜயசூரிய சர்வதேச கிரிக்கட் வர்ணனை, பயிற்றுவிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ஈடுபட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழல் மோசடி தொடர்பான விசாரணைகளுக்கு சனத் ஜயசூரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.