வவுனியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான ஸ்டிக்கர் பிரச்சாரம் முன்னெடுப்பு!!

739

கொரோனா விழிப்புணர்வு ..

தேசிய மட்டத்திலான கொவிட் 19 பரவுவதைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு ஸ்ரிக்கர் பிரச்சாரம் வவுனியா மாவட்டத்தில் இடம் பெற்றது.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மு.மகேந்திரன் தலைமையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இந் நிகழ்வு நடைபெற்றது.

அத்துடன், வவுனியா மாவட்டத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள், பொது சுகாதார பரிசோதகர் அலுவலகங்கள், பொது சுகாதார மருத்துவ மாதுக்களின் அலுவலகங்கள், தாய்சேய் கிளினிக் நிலையங்களிலும் ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டது.

மேலும், சுகாதாரத் திணைக்களம், பொலிஸ், இளைஞர்கள் சம்மேளனமும் இணைந்து பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ் வண்டிகளிற்கு வவுனியா பொது பஸ் நிலையத்தில் ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டது.

இதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மு.மகேந்திரன் மற்றும் உதவி பொலிஸ்மா அதிபர், மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள், வீதிப் போக்குவரத்துப் பொலிசார் மற்றும் சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

முகக் கவசம் அணிதல், தனி நபர்களுக்கிடையேயான இடைவெளியை ஒரு மீற்றரை விட அதிக இடைவெளியில் பேணுதல், கை கழுவுதல், இருமும் போதும் தும்மும் போதும் வாய் மூக்கு பகுதிகளை ரிசு அல்லது முழங்கையின் உட்புறத்தால் மறைத்தல் தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டன.