பெண் குழந்தை பிறந்ததால் மனமுடைந்த தாய் தீக்குளித்து தற்கொலை!!

557

Fireநாகை அருகே ஆண் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தீக்குளித்த பெண் உயிரிழந்துள்ளார். நாகை அடுத்த பட்டமங்களத்தைச் சேர்ந்தவர் அம்பேத்கார் (32). கூலி தொழிலாளி. இவரது மனைவி மீனா (28). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

ஆண் குழந்தை இல்லாததால் கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பிரசவமான மீனாவுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் மனமுடைந்த மீனா, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்றி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி மீனா இறந்தார். கீவளூர் பொலிசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.