இலங்கையில் இதுவரையில் 80 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று!!

492

கொரோனா தொற்று..

நாட்டில் 80 கர்ப்பிணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிபுணத்துவ மருத்துவர் மயுரமான்ன தேவோலகே இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கிழக்கு கொழும்பு ஆதார வைத்தியசாலையில் 28 கர்ப்பிணிகளுக்கு கொவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்கு இலக்கான கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை வழங்கும் ஒரே பிரிவு கிழக்கு கொழும்பு ஆதார வைத்தியசாலை என தெரிவித்துள்ளார்.

இதுவரையில் நான்கு கர்ப்பிணிகள் குழந்தை ஈன்றுள்ளதாகவும் அவர்களின் உடலில் கொவிட் தொற்று நீங்கியதன் பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.