ரஷ்ய நாட்டு விஷத்தால் கொல்லப்பட்ட சுனந்தா : அதிர்ச்சித் தகவல்!!

601

Sunanthaசுனந்தாவின் மரணம் இயற்கையான மரணம் கிடையாது கொலைதான் என்று சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

மத்திய இணை அமைச்சர் சசிதரூரின் மனைவியான சுனந்தா புஷ்கர் கடந்த மாதம் மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பாஜகவைச் சேர்ந்த சுப்ரமணியசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சுனந்தாவின் உடல் அவசரமாக தகனம் செய்யப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மேலும் அவரது வயிற்றில் பலத்த காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அவரது மூக்கு அழுத்தப்பட்டு, வாய் வலுக்கட்டாயாமாக திறக்கப்பட்டு, ரஷ்யா நாட்டு விஷத்தை கொடுத்து அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் கூறியுள்ளார்.