இன்று பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை!!

307


இடியுடன் கூடிய மழை..


இலங்கையின் வானிலையில் இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மேல், சப்ரகமுவ, தெற்கு மாகாணங்களில் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் சில இடங்களில் சுமார் 100 மி.மீற்றர் மழை பெய்யக்கூடும்.



இடியுடன் கூடிய மழைக்காலங்களில் வலுவான காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும். பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


இதேவேளை மத்திய, சப்ரகமுவ, மேற்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று காலையில் மூடுபனி நிலைமைகளை எதிர்பார்க்கலாம் என்று வானிலை மையம் எதிர்வுகூறியுள்ளது.