கிளிநொச்சியில் ஆட்டுக்கொட்டில் போன்ற கொட்டிலில் வசிக்கும் குடும்பத்தின் அவல நிலை!!

1732


கிளிநொச்சியில்..



கிளிநொச்சி பெரியபரந்தன் டி5 கிராமத்தில் இரவு வீசிய காற்றினால் தற்காலிக வீடு ஒன்று சேதமடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.



இதன் காரணமாக தற்காலிக வீட்டில் வசித்து வந்த குடும்பம் ஒன்று ஆட்டுக் கொட்டில் போன்ற ஒரு கொட்டிலில் தற்போது தங்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,




நேற்று இரவு பெய்த மழையுடன் கூடிய காற்று காரணமாக பெரியபரந்தன் பகுதியில் மூன்று பிள்ளைகளுடன் வசிக்கின்ற விநாயகமூர்த்தி நித்தியானந்தன் என்பவரது தற்காலிக வீட்டின் கூரை காற்றினால் பிடுங்கி எறியப்பட்டுள்ளது.


இந்நிலையில் தற்போது கொட்டில் ஒன்றில் தங்கியுள்ளனர். அத்தோடு அப்பிரதேசத்தில் வேம்பு ஒன்று முறிந்து வீழ்ந்துள்ள நிலையில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கிராம அலுவலர் ஊடாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பாதிக்கப்பட்டுள்ள குறித்த குடும்பத்திற்கு உடனடியாக அவர்களது சேதமடைந்த வீட்டின் கூரையினை திருத்துவதற்கு உதவி தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.