சவுதியில் நபர் ஒருவருக்கு தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம் : இந்தாண்டில் 10வது மரணதண்டனை!!

690

head cutசவுதி அரேபியாவில் நபர் ஒருவருக்கு தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சவுதியில் கொலை, கொள்ளை மற்றும் போதை மருந்து கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
என்னதான் சர்வதேச நாடுகள் மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்து வந்தாலும் ஓய்ந்த பாடில்லை.

இந்நிலையில் சலீம் அல் ஜிகாதி என்ற பழங்குடி சமூகத்தை சேர்ந்த நபர் ஒருவரை, வாலிபர் ஒருவர் தகராறு காரணமாக அடித்து உதைத்ததில் இறந்து விட்டார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வாலிபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
உடனடியாக அவரது தலை துண்டிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தாண்டு மட்டும் இதுவரையிலும் 10 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.