இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 64 வீத குடும்பங்களின் வருமானத்தில் நேரடி பாதிப்பு!!

288


கொரோனா தொற்று..


கொரோனா நோய்த் தொற்று வெகுவாக பரவி வருகிறது. இதன் காரணமாக 64 வீதமான குடும்பங்களின் வருமானத்தில் நேரடி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உருகுணை பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடம் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.கொரோனா பாதிப்பு காரணமாக 7 வீதமான குடும்பங்களின் வருமானம் முற்றுமுழுதாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இந்த நாட்டின் 45 வீதமான குடும்பங்கள் கடனை மீளச் செலுத்த முடியாத, அடகு வைத்த நகைகளை மீட்க முடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான குடும்பங்கள் நிதி உதவிகளை எதிர்பார்த்திருப்பதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.