லண்டன் ஹோட்டலில் பறக்கும் தட்டுகள்..!

454

லண்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மாயாஜாலக் காட்சிகள் போன்று ஓர்டர் செய்த உணவுகள் பறக்கும் தட்டாக ஆகாயத்தில் வந்து மேசையில் குதிக்கிறது.
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஹோட்டல் நிறுவனம் யோ சுஷி. தலைநகர் லண்டன் மட்டுமின்றி நாட்டின் பல இடங்களிலும் ரஷ்யா, ஐக்கிய அரபு குடியரசு உள்ளிட்ட நாடுகளிலும் இதன் கிளைகள் உள்ளன.

இதன் லண்டன் கிளையில் தான் சமீபத்தில் டிரோன் சர்வீஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.வாடிக்கையாளர் ஓர்டர் செய்த உணவை மினி டிரோன் ஒன்று சுமந்து கொண்டு சாப்பாட்டு மேசைக்கே பறந்து வருகிறது.

ஐபேட் கண்ட்ரோலில் இயக்கப்படும் இந்த டிரோன் சப்ளை வாடிக்கையாளர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.இதில் மினி ஹெலிகாப்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளதால், அது அழகாக இறக்கைகளை சுழற்றிய,படி , பறந்து செல்கிறது.

உணவுப் பதார்த்தங்களை வாடிக்கையாளர் எடுத்துக் கொண்ட பிறகு திரும்பி பறந்து சென்று விடும் வகையில் இது ட்யூன் செய்யப்பட்டுள்ளது.2 நவீன கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த டிரோனை, ஹோட்டல் ஊழியர் ஒருவர் ஐபாட் உதவி கொண்டு இயக்குகிறார்.

இந்த டிரோன் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறனுடையது.இது குறித்து யோ சுஷி ஓட்டல் அதிகாரிகள் கூறுகையில், உலகம் முழுவதும் எங்கள் ஹோட்டல்கள் 70 இடங்களில் உள்ளது.

கன்வேயர் பெல்ட் மூலம் சப்ளை செய்வது, ரோபோ மூலம் சப்ளை செய்வது ஆகிய முயற்சிகளை தொடர்ந்து, தற்போது மினி டிரோன் உதவியுடன் சப்ளையை தொடங்கியிருக்கிறோம்.

அசம்பாவிதங்கள் எதுவுமின்றிஇ இது சிறப்பாக நடந்தால் மற்ற கிளைகளிலும் இந்த பறக்கும் தட்டு முறை அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தனர்.

தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களின் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக மனிதர்களின் வேலைகளை இலகு படுத்தியுள்ளது.  லண்டனில் உள்ள உணவகமொன்றில் பறந்து பறந்து உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் உபகரணத்தை இதற்கு சிறந்த உதாரணமாக குறிப்பிடலாம்.

குறித்த உணவகம்.குறித்த உபகரணமானது மணிக்கு 25 மைல் வேகத்தில் பறந்துசெல்லக் கூடியது. இது பாரம் குறைந்த காபன் பைபர் பிரேம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் அதனை தனது 64 கிளைகளிலும் அறிமுகப்படுத்தவுள்ளது.குறித்த நிறுவனமானது இதற்கு முன்னரும் பல புரட்சிகர அறிமுகங்களை தனது உணவகங்களில் மேற்கொண்டுள்ளது.

உணவினை தானாக சென்று வழங்கக் கூடிய ‘கொன்வேயர் பெல்ட்’ மற்றும் பேசும் ரொபோ ட்ரோலிஸ் என என்பன அவையாகும்.இதனால் ஊழியர்களின் நேரம் மீதமாவதுடன், துரிதமாக உணவும் பரிமாறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

விஞ்ஞானம் போகின்ற போக்கை பார்த்தால் எதிர்காலத்தில் மனிதர்கள் செய்யும் சகல வேலைகளையும் இயந்திரங்கள் செய்யும்.மனிதர்களுக்கு இனி வேலையே இல்லாமல் போய்விடும் போலிருக்கிறது அல்லவா?

fly1 fly2
fly3