வவுனியா தினப்புயல் பத்திரிக்கை அலுவலகத்தின் மீது இனம்தெரியாதோர் தீவைப்பு!!

1032

dinapuyal

வவுனியா தேக்கவத்தை பகுதியில் அமைந்திருக்கும் தினப்புயல் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தீயுட்டல் சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த 21ம் திகதி இப்பத்திரிக்கை நிலையத்தின் மீது இனம்தெரியாதோர் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்றை மேற்கொண்ட நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் தியப்புயல் பத்திரிகை அலுவலகத்தில் பத்திரிக்கைகள் எரிந்த நிலையில் காணப்பட்டதாக பத்திரிக்கை நிலையத்தில் பணிபுரியும் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

இச் சம்பவத்தை அடுத்து அங்கு விரைந்த வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.