நீர் மூலங்கள் மூலம் இலங்கைக்கு ஏற்படவுள்ள பாரிய ஆபத்து!!

793

நீர் மூலங்கள்..

கொவிட் – 19 வைரஸ் பரவல் தொடர்பில் பல நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கைகளுக்கு அமைய வைரஸ் தொற்று மலம் மற்றும் கழிவுநீர் அமைப்புகள் மூலம் பரவக்கூடும் என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மேத்திக விதானகே தெரிவித்துள்ளார்.

இலங்கையும் இவ் விடயத்தில் கவனம் செலுத்தி பாதுகாப்பானதை தேர்வு செய்ய வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச விஞ்ஞானிகள் இந்த விவகாரம் குறித்து இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

அவர்களை பொறுத்தவரை, குழாய் கிணறுகள் மற்றும் நிலத்தடி மூலங்களிலிருந்து பெறும் நீரை நுகர்வுக்கு முன்னர் 100 டிகிரி செல்சியஸில் கொதிக்க வைப்பது சிறந்தது. கொவிட் – 19 வைரஸ் கழிவுநீர் மூலம் பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஈக்வடோர் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளது.

மற்ற நாடுகளைப் போலல்லாமல் சமூக அடிப்படையிலான கழிவு நீர் சுத்திகரிப்பு வசதிகள் இல்லாத நிலையில், நீர் ஆதாரங்கள் எளிதில் மாசுபடும் அபாயத்தை இலங்கை எதிர்கொள்கிறது என்று பேராசிரியர் மேலும் கூறியுள்ளார்.

-தமிழ்வின்-