வவுனியாவில் இறைச்சி விற்பனைக்கு தடை!!

348

eraichiஇலங்கையின் சில மாவட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி, ஆட்டிறைச்சி ஆகியவற்றின் விற்பனைகள் தடைசெய்யப்பட்டுள்ளன.

மறு அறிவித்தல் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என்று இலங்கையின் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர் கே டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

மிருகங்களுக்கு ஏற்பட்டு வரும் கால்வாய் அல்லது கோமாரி நோயின் தாக்கம் காரணமாகவே வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, அம்பாறை மற்றும் அநுரதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்த இறைச்சி வகைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் காரணமாக பசுமாடுகள், எருமைமாடுகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், பன்றிகள் போன்றவையே பாதிக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் கூறினார்.

இந்தநிலையில் குறித்த நோயினால் இறந்த விலங்குகளை பாதுகாப்பாக புதைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அடுத்த மூன்று மாத காலப்பகுதிக்கு பின்னர் நடத்தப்படும் சோதனையின் போது கால்வாய் நோய் இல்லையென்று உறுதி செய்யப்பட்டால் மாத்திரமே குறித்த இறைச்சிகளுக்கான தடை நீக்கப்படும் என்றும் சில்வா குறிப்பிட்டார்.