ராகுலை திருமணம் செய்யத் தயார் : நடிகை பரபரப்பு அறிக்கை!!

940

Rahu

பிரபல பொலிவுட் நடிகையான ராக்கி சாவந்த் ராகுல் காந்தி விரும்பினால் அவரை திருமணம் செய்ய தயாரென கூறியுள்ளார்.

ராக்கி சாவந்த் அவரது போஜ்புரி மொழி திரைப்படமான ´Katta Tanal Dupatta´ – வின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் ராகுல் காந்தி, நரேந்திர மோடி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் பற்றிய அவரது கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டார்.

அப்போது அவர் ராகுல் காந்தி விரும்பினால் அவரை திருமணம் செய்து கொள்ள தயாராக உள்ளதாகவும், நரேந்திர மோடிக்கு தன்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பு அளிக்கப்படவேண்டுமெனவும் தெரிவித்தார்.

பீகாரின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக செயல்படும் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரையும் பாராட்டிய அவர் முன்னாள் டெல்லி முதலமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகியதற்கு அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதது தான் காரணம் எனவும், டெல்லி மக்களை அவர் ஏமாற்ற முடியாது, அவர் மீண்டும் முதலமைச்சராக முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.