பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!!

1746

பாடசாலைகள் தொடர்பில்..

கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகள் எதிர்வரும் 23ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு நேற்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது சுகாதார வழிமுறைகளுக்கமைய கல்வி கற்பிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதற்கமைய சமூக இடைவெளியை பாதுகாத்து, சுகாதார பாதுகாப்பு முறைக்கமைய செயற்பட்டு 6 – 13ஆம் வகுப்பு வரை பாடசாலைகளை நடத்தி செல்வதற்கான சூழலை உருவாக்கும் பொறுப்பு பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதிபர்களினால் பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி, கிராம சேவகர், பாடசாலை அபிவிருத்தி குழு பிரதிநிதிகள் மற்றும் பழைய மாணவர்கள் பிரநிதிகள் கொண்ட குழுவொன்றை நியமிக்க வேண்டும். குழுவின் பரிந்துரைகளை கல்வி வலையமைப்பின் இயக்குனரிடம் வழங்க வேண்டும்.

சுகாதார ஆலோசனைக்கமைய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர ஏனைய அனைத்து பகுதிகளிலும் பாடசாலைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தனிப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளை தொடர்ந்து திறக்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தரம் 1 – 5 வரையிலான பாடசாலைகள் சுகாதார பாதுகாப்பினை உறுதி செய்த பின்னர் திறப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.