கொழும்பில் தப்பிச் சென்ற கொரோனா நோயாளியான பெண் : மக்களின் உதவியை நாடிய பொலிஸார்!!

735


கொரோனா நோயாளி..


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பெண் ஒருவர் தப்பியோடியுள்ளார். அவரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.நேற்று இரவு அந்த பெண் தனது இரண்டரை வயதுடைய குழந்தையுடன் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். எஹெலியகொட பிரதேசத்தில் உள்ள உறவினரின் வீட்டில் குழந்தையை ஒப்படைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


எனினும் இன்று காலை பொலிஸாரினால் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


25 வயதுடைய அந்த பெண் போ தை ப் பொ ரு ள் வர்த்தகத்திற்கு தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.