கொழும்பில் இன்று பரபரப்பை ஏற்படுத்திய மக்கள் : அரசாங்கத்திற்கு எதிராக போ ராட்டம்!!

799


அளுத்மாவத்தையில்..



கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அளுத்மாவத்தையில் மக்கள் ஆ ர்ப்பாட்டத்தில் இறங்கியமையினால் அந்தப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.



கடந்த ஒரு மாதகாலமாகத் தொடரும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தினால் தமது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.




அரசாங்கம் தமக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி மோதரை, இக்பாவத்தை பகுதி மக்கள் அளுத்மாவத்தை வீதியில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளார்கள்.


இன்று காலை ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அந்தப் பகுதிக்கு விரைந்த பொலிஸார் நிலைமைகளைக் கட்டுப்படுத்த முயன்றபோதிலும், அதிகளவு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கிருந்து வெளியேறிவிட்டார்கள்.

தொடரும் ஊரடங்கால் தம்மால் தொழில் செய்ய முடியாதிருப்பதாகத் தெரிவித்த ஆர்ப்பாட்டக் காரர்கள், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 5,000 ரூபா நிவாரணம் தமது குடும்பத்தின் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லாமையால் தாம் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்கள்.


அரசாங்கம் உடனடியாகத் தமக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சிறு குழந்தைகள், பெண்கள் வயோதிபர்கள் தொடரும் ஊரடங்கினால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாகபவும் அவர்கள் தெரிவித்தார்கள்.

இது தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவே இந்த ஆர்ப்பாட்டத்தை நாம் நடத்துவதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.