ஆசிய கிண்ண கிரிக்கட் பந்தயம் : இரண்டு இந்தியர்கள் கைது!!

1110

Cricketஇந்திய அஹமதாபாத்தில் ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகளுக்கான பந்தயத்தில் ஈடுபட்ட இரண்டுபேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். நேற்று காலை அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டி தொடர்பிலேயே இவர்கள் பந்தயம் கட்டியுள்ளனர்.

பாரத் டக்கார், பிரகாஸ் டக்கார் ஆகியோரே கைதுசெய்யப்பட்டதாக போபால் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 17 கைத்தொலைபேசிகள் இரண்டு மடிக்கணணிகள், தொலைக்காட்சி, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.