வவுனியா காத்தார்சின்னக்குளத்தில் பட்டதாரி பயிலுனர்களின் சிறப்பான பணி!!

1307


காத்தார்சின்னக்குளத்தில்..


காத்தார்சின்ன குளம் கிராம அலுவலர் பிரிவில் கிராமிய சுகாதார மேம்பாட்டு குழுவின் ஒழுங்கமைப்பில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினரின் ஒத்துழைப்புடன் இன்றையதினம் ஸ்ரீராமபுரம் மற்றும் அண்ணாநகர் கிராமங்களில் டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான திண்மக் கழிவுகளை உரிய முறையில் அகற்றுவதற்கான பணியினை வெற்றிகரமாக இடம்பெற்றிருந்தது.


இச் செயற்றிட்டத்தில் பொது சுகாதார உத்தியோகத்தர், கிராம சேவையாளர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பட்டதாரி பயிலுனர்கள் எனப்பலரும் பங்குபற்றியிருந்தனர்.