அழகிய ஜோடியின் திருமண வாழ்க்கையில் கும்மியடித்த சமூகவலைத்தளம் : விவாகரத்து வரை வந்து நிற்கும் நிலை : எச்சரிக்கை செய்தி!!

3961

அழகிய ஜோடி..

இந்தியாவில் மதங்களை கடந்து திருமணம் செய்து கொண்ட தம்பதி, தற்போது விவாகரத்து செய்ய முடிவுக்கு வந்துள்ளதாகவும், இதற்கு முக்கிய காரணம் சமூகவலைத்தளம் என்பதும் தெரியவந்துள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு, யூ.பி.எஸ்.சி தேர்வில் பட்டியலினத்தை சேர்ந்த டினா டபி என்ற பெண் முதல் இடத்தையும் அதர்கான் 2-வது இடத்தையும் பிடித்தனர்.

காஷ்மீரை சேர்ந்த அதர் கானும், ஜெய்ப்பூரை சேர்ந்த டினாடபியும் முசொரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய மையத்தில் தங்கி பயிற்சி எடுத்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதன் பின் இந்த ஜோடி தங்களுடைய டேட்டிங் தொடர்பான புகைப்படங்களை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இதையடுத்து மூன்று ஆண்டுகளுக்கு பின், அதாவது கடந்த 2018-ஆம் ஆண்டு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, சுமித்ரா மகாஜான் உள்ளிட்ட பிரபலங்களின் ஆசீர்வாதத்தோடு இந்த தம்பதிக்கு திருமணம் நடைபெற்றது.

இதை இந்துமகாசபா தலைவர்கள் பலரும் லவ் ஜிகாத் என்று கடுமையாக விமர்சித்தினர். இருப்பினும் இந்த ஜோடி அதை எல்லாம் மீறி, தங்கள் வாழ்க்கையை துவங்கினர். இவர்களுக்கு ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரிலேயே பணியிடமும் வழங்கப்பட்டது.

பணியில் நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த டினா டபிகான் கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறப்பாக பணியாற்றியதால் அவர் பணிபுரிந்த பில்வாரா மாவட்டம் முன்மாதிரியானதாக அறிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் அதர்கானும் கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறப்பாக பணியாற்றிவந்தார். இதற்கிடையில் டினா டபிக்கு பலர் முகநூல் போலியான கணக்குகளில் ஆர்மி எல்லாம் ஆரம்பித்தனர்.

இதுவே அவர்களுக்கு பெரிய வினையாக மாறிவிட்டது. ஏனெனில், கணவன் மனைவிக்கிடையேயான ஒப்பீடும் அவர்களுக்குள் இந்த பதிவுகள் மனக்கசப்பை உருவாக்கிது.

இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு தனது பெயரில் இயங்கி வரும் போலி முகநூல் கணக்குகளை முடக்க கோரி டினா டபி காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

பின்னர் சில தினங்களில் தனது முகநூல் கணக்கில் பெயருக்கு பின்னால் இருந்த கான் என்ற பெயரை நீக்கிவிட்டு பழைய படி, டினாடபி என்று போட்டுக் கொண்டார். இதற்கு பதிலடியாக இன்ஸ்டாகிராமில் டினாடபியை அன் பாலோ செய்தார் கணவர் அதர்கான். இதனால் இருவருக்குள்ளேயும் மோதல் இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ஜெய்ப்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளக்கியுள்ளது.

சாதி மற்றும் மத மறுப்பு திருமணத்துக்கு அடையாளமாக சொல்லப்பட்ட இந்த ஐ.ஏ.எஸ் தம்பதியர் எடுத்துள்ள விவாகரத்து முடிவுக்கு அவர்கள் கட்டுபாடற்ற முறையில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்ட புகைபடங்களே காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.

இதனால் சமூகவலைத்தளமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களை பயன்படுத்தும் தம்பதிகள் சற்று கவனமுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதை இந்த செய்தி உணர்த்துகிறது.