பற்றி எரிந்த தீ : ஹீரோவாக மாறிய பூனை!!

813

catபிரான்சில் செல்லப்பிராணியாய் வளர்க்கப்பட்டு வந்த பூனைக்குட்டி பலரை தீவிபத்திலிருந்து காப்பாற்றியுள்ளது.

பிரான்சின் பிலேஸ் பகுதியின் பண்ணை வீடு ஒன்றில் கடந்த 23ம் திகதி தீப்பற்றி கொண்டது. அப்போது அவ்வீட்டிலிருந்தோரை காப்பாற்றும் நோக்கில் வீட்டாரால் வளர்க்கப்பட்டு வந்த ‘Meatball’ என்ற பூனைக்குட்டி வீட்டின் பரணை கீறி சத்தம் எழுப்பியுள்ளது.

இச்சத்ததை கேட்டு அந்த வீட்டு பெண் ஒருவர், தீ பரவுவதை தவிர்க்க மின்சாரத்தை துண்டித்து தீயணைப்பு படையினருக்கு தகவலளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததுடன் உயிர்சேதம் ஏதும் ஏற்படாமல் தடுத்தனர்.

இச்சம்பவத்தில் அவ்வீட்டிலிருந்த 11 பேர் மற்றும் அண்டை வீட்டுக்காரர்களும் பூனைக்குட்டியினால் காப்பாற்றப்பட்டனர்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அப்பகுதியிலுள்ள நபர் ஒருவர், பூனைக்குட்டி உண்பதற்காக அது வாழும் காலம் வரை Boulette என்ற உயர்தர பிஸ்கேட்டை வாங்கி கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.