200 மீட்டரை 46.74 வினாடியில் கடந்த 116 வயது முதியவர் சாதனை படைத்துள்ளார்.
கோவையில் 35வது தேசிய முதியோர் தடகள போட்டி நடந்தது.
இதன் 200 மீற்றர் ஓட்டத்தில் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தரம்பாள் குஜ்ஜால் என்ற 116 வயது முதியவர் 46.74 வினாடியில் கடந்து சாதனை புரிந்தார்.
இந்த போட்டியில் 400 மீற்றர் ஓட்டத்திலும் அவர் தங்கம் வென்றுள்ளார். இவர் தனது இளமை காலங்களில் மராத்தான் பந்தயத்தில் பங்கேற்று இருக்கிறார்.




