ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த பெண்களால் பரபரப்பு!!

1051

Rahul

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்த ராகுல் காந்திக்கு, பெண்கள் திடீரென முத்தம் கொடுத்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அசாம் மாநிலத்தில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப் பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

கடைசி நாளான நேற்று முன்தினம் கவுகாத்தி பகுதியில் பிரசாரம் செய்தார். கூட்டத்தில் 600க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். அவர்கள் மத்தியில் ராகுல் பேசினார்.

நாட்டின் வளர்ச்சியில் எல்லா துறைகளில் பெண்களின் பங்கு அதிகமாக வேண்டும். ஜனாதிபதி, பிரதமர், முதல்வர், எம்.பி., எம்எல்ஏ பதவிகளை பெண்களுக்கு வழங்க காங்கிரஸ் எப்போதும் பாடுபட்டு வருகிறது என்று பேசி கொண்டிருந்தார்.

அப்போது ராகுல் காந்தியிடம் கை குலுக்க பலர் முண்டியடித்தனர். அவர்களில் ஒரு பெண் திடீரென ராகுலை நெருங்கி உச்சந்தலையில் முத்தமிட்டார்.

புன்னகையுடன் ராகுல் அமைதியாக இருந்தார். திடீரென இன்னொரு இளம்பெண் வந்து, ராகுல் காந்தியின் கன்னத்தில் முத்தமிட்டார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.