வவுனியா தமிழ் மாமன்றத்தின் வாசிப்பும் அனுபவப்பகிர்வும்!!(படங்கள்)

309

தமிழ் மாமன்றம், வவுனியா மாவட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் வாசிக்கும் திறனை அதிகரிக்கும் நோக்குடன், மாதந்தம் நடாத்துகின்ற ‘வாசிப்பும் அனுபவப்பகிர்வும்’ நிகழ்வின் வரிசையில் பெப்ரவரி மாதத்திற்கான வாசிப்பும் அனுபவப்பகிர்வும் நிகழ்வு , நேற்று (27.02.2014) காலை 10 மணிக்கு, வவுனியா இந்திரன்ஸ் விடுதி மண்டபத்தில் இடம் பெற்றது.

இன் நிகழ்வில் ‘மரணம் முற்றுப்புள்ளி அல்ல’ எனும் அப்துல் ரகுமானின் கவிதை நூல் சார்ள்ஸ் அவர்களாலும், ‘கடல் புறா’ எனும் சாண்டில்யனின் நாவல் கிஷாந் அவர்களாலும் பகிரப்பட்டது. இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இப் பகிர்வு மிகவும் பயனுள்ளதாகவும், ஆரோக்கியமான தர்க்கங்கள் நிறைந்தாகவும், மிகவும் சுவரஸ்யமானதாகவும் காணப்பட்டது. இவ்விரு நூல்களையும் வாசிக்காதவர்களை,வாசிக்கின்ற ஆர்வத்தை தூண்டும் வகையிலும் அவர்களுடைய பகிர்வு அமைந்திருந்தது.

இப் பகிர்வில் ஓர் ஆரோக்கியமான விவாதமும் இடம்பெற்றது. கல்கி மற்றும் சாண்டில்யன் என்கின்ற இருவருடைய படைப்புக்கள் பற்றியும், மிகவும் சுவரஸ்மான கருத்து மோதல் இடம்பெற்றமை, இன்றைய பகிர்வை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தியது. இது போன்ற ஆரோக்கியமான விவாதங்களுக்கு தமிழ் மாமன்றம் என்றும் களம் அமைத்துக் கொடுக்கும்.

பங்கு கொண்ட பாடசாலை மாணவர்கள் இப் பகிர்வின் மூலம் இலக்கியம் மேலான ஆர்வம் அதிகரித்ததாகவும், தொடர்ந்து புத்தகங்களைத் தேடி வாசிக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். பங்குகொண்ட அனைவருக்குமே, இப் பகிர்வு மிகப் பயனுள்ளதான இருந்தைமைய அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் மூலம் அறியக்கூடியாதாக இருந்தது.

எதிர்வரும் மாதங்களில் இருந்து இவ் ஒன்று கூடல், வவுனியா கடந்து வேறு இடங்களிலும் நடாத்த தமிழ் மாமன்றம் எண்ணியுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக பரீட்சார்த்தமாக கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் அடுத்த மாதம் நாடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குறித்த மாவட்டங்களில் வசிக்கும், ஆர்வமுள்ளோர், தமிழ் மாமன்றத்துடன் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு தமிழ் மாமன்றம் கேட்டுக்கொள்கின்றது.

அத்துடன் மார்ச் மாதம் 30ம் திகதி, தமிழ் மாமன்றதினுடைய முதலாவது பொது நிகழ்வான ‘இயல் விழா -2014’ மிகச் சிறப்பாக இடம்பெறவுள்ளது. அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் தற்பொழுதிலிருந்து தமிழ் மாமன்றத்தால் மேற்கொள்ளப்பட்டு கொண்டு இருக்கின்றது. இவ் விழாவின் ஒழுங்கமைப்புக்களில் தங்களை இணைத்துக்ககொள்ள விரும்புகின்ற, இலக்கிய ஆர்வலர்களை தமிழ் மாமன்றம் வரவேற்கிறது.

தமிழ் மாமன்றம் ஆரம்பிக்கபட்டு குறுகிய காலத்திற்குள், வவுனியா மாவட்டத்தில், கலை இலக்கிய செயற்பாடுகளை தன்னாலான பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்துள்ள இந் நிலையில், தற்போது வவுனியா மாவட்டம் கடந்து ஏனைய மாவட்ங்களில் தனது சேவையை விஸ்தரிக்கவுள்ளது. ஆகவே தமிழ் மாமன்றத்துடன் இணைந்து, செயற்பட விரும்புகின்ற இலக்கிய ஆர்வலர்களை அனைவரையும் தமிழ் மாமன்றம் வரவேற்க்கின்றது.
‘தமிழால் வையகத்தலைமை கொள்வோம்’

11 12 13 14 15