ஆசிரியர் திட்டியதால் தீக்குளித்த மாணவி!!

607

Fireதிருவொற்றியூர், அப்பர் நகர் கடற்கரை சாலை பகுதியைச் சேர்ந்த முனியாண்டியின் மகள் பவித்ரா (14). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

பவித்ராவின் தாயார் சோபா, செவ்வாய்க்கிழமை பள்ளியில் படிக்கும் தனது மகளை பார்க்கச் சென்றார். அப்போது ஆசிரியை ஒருவர், பவித்ரா சரியாக படிப்பது இல்லை என புகார் கூறினாராம்.

இதனால் அவமானம் அடைந்த பவித்ரா செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் தனது உடல் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.