காங்கிரஸில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி!!

374

Vijayashanthiபிரபல சினிமா நடிகையும் தெலுங்கு தேசக்கட்சியின் எம்.பி.யுமான விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இவருக்கும் தெலுங்கு தேசக்கட்சி தலைவரான சந்திரசேகர ராவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பின்னர் காங்கிரஸில் இணைவதாக அறிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் இது பற்றி கூறுகையில், ஆந்திராவின் மேடாக் பகுதி எம்.பியான விஜயசாந்தி தெலுங்கானா மாநிலத்திற்காக கடுமையாக போராடியவர். இன்று சோனியாவை சந்தித்து அவரது ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டார். இது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் கட்சியை காங்கிரசுடன் இணைக்க மறுத்து விட்டார். நான் தற்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் நல்ல உறவில் உள்ளேன் என்று விஜயசாந்தி தெரிவித்தார்.