புலிக்குட்டியுடன் பாருக்குள் நுழைந்தவர் கைது!!

594

tigerஅமெரிக்காவில் புலிக்குட்டியுடன் பாருக்குள் நுழைந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இல்லினாய்ஸ் மாநிலத்தில் உள்ள சிக்காகோ நகரில் வசிக்கும் ஜான் பசைல் என்பவர் கைவிடப்பட்ட விலங்குகளை பரிவுடன் வளர்த்து பராமரித்து வருகிறார்.

தனது கருணை இல்லத்தில் பராமரிக்கப்படும் முழங்கால் அளவு உயரம் கொண்ட புலிக்குட்டியுடன் திடீரென வாக்கிங் புறப்பட்ட அவர் லாக்போர்ட் பகுதியில் உள்ள ஒரு பாருக்குள் நுழைந்தார்.

புலிக்குட்டியுடன் சரக்கு அடிக்க வந்த குடிமகனை பார்த்து பீதியடைந்த வாடிக்கையாளர்கள் அலறியபடி ஓட்டம் பிடித்தனர். இந்த பாருக்கு வந்த ஒரு பெண்ணை இதற்கு முன்னர் இதே புலிக்குட்டி கடித்து காயப்படுத்திய செய்தி அவர்களில் சிலருக்கு தெரிந்திருந்தது.

இதனையடுத்து, பொலிசாருக்கு அவர்கள் தகவல் அளித்தனர். விரைந்து வந்த பொலிசார், அபாயகரமான விலங்குடன் மக்களுக்கு பீதி ஏற்படுத்தியதாக ஜான் பசைல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.