தேர்தல் களத்தில் நக்மா!!

334


nagma

நடிகை நக்மா வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் உத்திரபிரதேச மாநிலத்தில் போட்டியிடவிருக்கிறார்.



நடிகை நக்மாவை வரும் நாடாளுமன்ற தேர்த்லில் தங்கள் கட்சி சார்பில் போட்டியிட வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

காங்கிரஸ் உறுப்பினரான நக்மா உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள புல்புர் தொகுதியில் போட்டியிடக்கூடும் என்று தெரிகிறது.



இந்த தொகுதி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு போட்டியிட்ட தொகுதி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. நக்மாவுக்கு போஜ்புரி ரசிகர்கள் ஏராளமாக இருப்பதால் அவரை போட்டியிட வைத்தால் வெற்றி கிடைக்கும் என்று காங்கிரஸ் நம்புகிறது.



மேலும் அவரை கட்சிக்காக பிரச்சாரம் செய்ய வைக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.