மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா பற்றி பலருக்கு தெரியாத சுவாரஸ்யமான விடயங்கள்!!

1935

நடிகை சித்ரா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மிகவும் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் பலரைக் கவர்ந்திழுத்தவர் தான் நடிகை சித்ரா. இவருக்கு 28 வயது தான் ஆகிறது. இவர் ஒரு விஜே என்பது நம் அனைவருக்குமே தெரியும்.

இவர் ஷூட்டிங் முடித்துவிட்டு நேற்று இரவு 2.30 மணிக்கு ஹோட்டல் அறைக்கு வந்துள்ளார். அதன் பின் குளிக்க போகிறேன் என்று தன் வருங்கால கணவரிடம் சொல்லிவிட்டு சென்றவர், தான் அணிந்திருந்த பு ட வையால் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டுள்ள ச.ம்.ப.வ.ம் ப.ல.ருக்கும் அ.தி.ர்.ச்.சியை அ.ளி.த்.து.ள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா சீரியல்களில் மட்டுமின்றி, நிகழ்ச்சித் தொகுப்பு மற்றும் பல்வேறு விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி இவர் ஒரு நல்ல டான்சர் மட்டுமின்றி, ஒரு சைக்காலஜிஸ்ட்டும் கூட. இவரைப் பற்றி பலருக்குத் தெரியாத சில சுவாரஸ்யமான தகவல்களை கீழே பார்ப்போம்.

சென்னையில் 1992 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி பிறந்தவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இவரை சித்து என்று செல்லமாக அழைப்பார்கள். இவரை வாயாடி என்றும் பலர் சொல்வதுண்டு. ஏனெனில் அந்த அளவில் படபடவென்று பேசுவார்.

இவர் சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி பெண்கள் கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி முடித்துவிட்டு, தனது எம்.எஸ்.சி சைக்காலஜி படிப்பை எஸ்ஐடி கல்லூரியிலும் முடித்திருக்கிறார். இவர் குடும்பத்திலேயே இவர் தான் முதல் பட்டதாரியாம்.

சின்னத்திரை நடிகை சித்ரா மிகவும் சிரமப்பட்டு தான் இந்த நிலையை எட்டியுள்ளதாக அவ்வப்போது கூறுவார். இவர் தனது முதுகலைப் படிப்பைப் படிக்கும் போதே, மாடலிங், தொகுப்பாளினியாக பகுதிநேரமாக பணியாற்றத் தொடங்கினார். இவர் முதன்முதலில் பணியாற்றியது மக்கள் தொலைக்காட்சியில் தான்.

விஜே சித்ரா 2013 ஆம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘சட்டம் சொல்வது என்ன’ என்ற பிரபலமான நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அதன் பின் நொடிக்கு நொடி அதிரடி, ஊர் சுத்தலாம் வாங்க, என் சமையலறையில் போன்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினியாக இருந்தார்.

சின்னத்திரை நடிகை சித்ரா 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியலில் முக்கிய கதாபாத்திரமான பெரிய பாப்பாவாக நடித்தார். இதில் தான் இவர் ஒரு நடிகையாக பிரபலமானார்.

விஜே சித்ரா மக்கள் தொலைக்காட்டி, வேந்தர் டிவி, ஜெயா டிவி, சன், டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி, கலர் தமிழ் என பல தொலைக்காட்சிகளிலும் பணிபுரிந்துள்ளார். இவரது மீடியா பயணத்தைப் பார்த்தால், இவருக்கு இந்த துறையில் இவருக்கு உள்ள ஆவல் மற்றும் அனுபவத்தை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த அளவில் மீடியாவில் அழகாக உலா வந்தார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்த பின், இவரது புகழ் மேலோங்கிவிட்டது. சொல்லப்போனால் இவருக்கு ரசிகர்களின் பட்டாளம் இந்த சீரியலுக்கு பின் அதிகரித்துவிட்டது என்றே கூறலாம்.

நடிகை சித்ராவுக்கு சிலம்பம் சுற்றத் தெரியும். அதேப் போல் மரம் ஏறவும் தெரியுமாம். இதையெல்லாம் வேலுநாச்சி என்னும் ஜீ தமிழ் சீரியலுக்காக முறையாக கற்றிருக்கிறார். இவர் புன்னகை அரசியாக காணப்பட்டாலும், இவருக்கு கோபம் மூக்குக்கு மேல வருமாம்.

இவருக்கு 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான ஹேம்நாத் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஏன் விஜய் டிவி கூட ஒரு நிகழ்ச்சியில் சித்ராவுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுக்கும் வகையில்,

அவரது வருங்கால கணவரான ஹேம்நாத்தை அழைத்து வந்து மோதிரம் மாற்ற வைத்தது. ஜனவரி மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில், தி.டீ.ரெ.ன்.று விஜே சித்ரா தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டது பலருக்கும் பே.ர.தி.ர்.ச்சியாக உள்ளது.

விஜே சித்ரா எம்.எஸ்.சி சைகாலஜி முடித்த ஒரு சைகாலஜிஸ்ட். இவர் மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பாக கவுன்சிலிங் கொடுக்கக்கூடியவர் என்று அவரது நண்பர்கள் கூறுவர்.