பிரேசிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சம்பா நடனத் திருவிழாவை மக்கள் மிக உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
பிரேசிலில் ஆண்டுதோறும் சம்பா நடனத் திருவிழா நடைபெறும்.
ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெறும் இத்திருவிழாவில், ஆயிரக்கணக்கான நடன கலைஞர்கள் குழுவாக கலந்து கொள்வர்.
பாரம்பரிய முறைப்படி ஒவ்வொரு குழுவிலும் 3 500 தொடக்கம் 40 000 கலைஞர்கள் இருப்பார்கள்.
இவர்களது அலங்கார ஊர்திகளும் திருவிழாவில் பேரணியாக செல்லும், ஒவ்வொரு குழுவும் ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு அதற்கேற்ப உடைகள் அணிந்தும் நடனமாடுவர்.
இந்த ஆண்டு வெகு சிறப்பாக நடைபெறவுள்ள திருவிழா நேற்று தொடங்கியது, மக்கள் மிக உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.





