முதல் எல்.பி.எல் போட்டித் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற யாழ்ப்பாண அணி!!

1042


சம்பியன் பட்டம் வென்ற யாழ்ப்பாண அணி..


முதல் தடவையாக இலங்கையில் நடைபெற்ற எல்.பி.எல் எனப்படும் லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் எனும் யாழ்ப்பாண அணி சாம்பயின் பட்டம் வென்றுள்ளது.இறுதிப் போட்டியில் காலி க்ளெடியேட்டர்ஸ் கழகத்தினை 53 ஓட்டங்களினால் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.


இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய யாழ்ப்பாண அணி முதலில் துடுப்பெடுத்தாடியதுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விட்டக்களை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.


இதில் சொயிப் மலிக் 46 ஓட்டங்களையும், அணித் தலைவர் திசர பெரேரா 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் காலி அணி சார்பில் தனஞ்சய லக்ஸான் மூன்று விக்கட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காலி க்ளெடியேட்டர்ஸ் கழகம் 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 135 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

இதில் அணித் தலைவர் பானுக ராஜபக்ச 40 ஓட்டங்களையும், அசாம் கான் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் யாழ்ப்பாண அணியின் சார்பில் சொயிப் மாலிக் மற்றும் உஸ்மான் ஷின்வாரி ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

கொவிட் நோய்த் தொற்று நிலைமைகளுக்கு மத்தியில் இந்தப் போட்டித் தொடர் நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.