மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை பலாத்காரம் செய்த மாணவர்கள்!!

587

Rapeகுளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை பலாத்காரம் செய்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர்கள் அகில், அதுல்(20). இரட்டை சகோதரர்களான இவர்கள் கோவை அருகேயுள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார்கள்.

இருவரும் இதே கல்லூரியில் படிக்கும் சீதா(19) என்ற மாணவியை தாங்கள் தங்கியிருந்த பங்களாவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் அந்த மாணவிக்கு குளிர்பானத்தில் மதுகலந்து கொடுத்தனர். மாணவிக்கு மயக்கம் ஏற்பட்டதும் மாணவர்கள் இருவரும் சீதாவின் கற்பை சூறையாடினார்கள்.

தான் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து சீதா துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அதிரடியாக விசாரித்தனர். பின்னர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு அகிலை கைது செய்தனர்.

அதுல் கேரளாவுக்கு தப்பிச்சென்று விட்டதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அதுலை கைது செய்து துடியலூருக்கு அழைத்து வந்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

இந்த வழக்கின் உண்மை நிலையை வெளிக்கொண்டுவர சம்பவத்தன்று மாணவியிடம் பேசியது யார் என்ற பட்டியலை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். அதன் பின்னர் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.