உலகின் ஆபத்தான நாடுகளில் இந்தியா மூன்றாமிடம்!!

314

Indஉலகில் ஆபத்தான குண்டு வெடிப்பு நடக்கும் இடங்களில் இந்தியாவிற்கு 3வது இடத்தில் உள்ளதாக தேசிய குண்டுவெடிப்பு புள்ளிவிபர மையம் சமீபத்தில் தெரிவித்துள்ளது.

அதாவது ஆப்கானிஸ்தானை காட்டிலும் இந்தியா ஆபத்தான இடமாக உள்ளது வருத்தமளிக்கிற ஒரு செய்தியாக உள்ளது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டிலும் கணக்கிட்டு பார்க்கும்போது ஈராக் மற்றும் பாகிஸ்தான் கூட இந்தியாவிற்கு பின்னர்தான் என்று அந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

போர் அச்சுறுத்தல் உள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவில் கூட ஆபத்து குறைவு என்கிறது அந்த புள்ளிவிபரம்.

2013ல் இந்தியாவில் 212 குண்டு வெடிப்புகளால் இந்தியா பாதிப்படைந்துள்ளது. இது ஆப்கானிஸ்தானை காட்டிலும் இருமடங்கு அதிகமாக உள்ளது. அதாவது ஆப்கானிஸ்தானில் 108 குண்டு வெடிப்புகள் நடந்திருக்கிறது.

இதேபோல் வங்கதேசத்தில் 75 குண்டுவெடிப்புகளும் சிரியாவில் 36 குண்டுவெடிப்புகளும் நடந்து அந்நாட்டின் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. இந்நிலை 2012ல் 241 குண்டுவெடிப்புகள் நடந்திருந்தது. அது 2013ல் 212 ஆக குறைந்துள்ளது.

அதேமாதிரி குண்டு வெடிப்பு பாதிப்பால் 130 பேர் பலியாகி இருந்ததாகவும் 466 காயமடைந்தோர்கள் என 2013 ல் பதிவாகி உள்ளது. இதே 2012ல் 113 உயிரிழப்புகளும் 419 காயமடைந்தோர்களும் பாதிப்படைந்ததாக தெரிவிக்கின்றன புள்ளிவிபரங்கள். இந்தியாவி்ல் ஆண்டு சராசரியாக 1337 பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதிலும் ஆப்கானிஸ்தானை விட அதிகமாக உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

உண்மையிலேயே, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் தான் 75 சதவீத குண்டுவெடிப்பு பங்களிப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

இதில் மக்களை இலக்காக கொண்டு குண்டுவெடிப்பு தாக்குதல் உலகில் உள்ள நாடுகளை காட்டிலும் இந்தியாவில் பராவாயில்லை என்கிறது சற்று ஆறுதல் அளிக்கிறது.

இதுவே மக்களை குறிவைத்து நடத்தும் தாக்குதல் 69 சதவீதமாக உலக நாடுகளில் பதிவாகி உள்ளது. அதே போல இந்தியாவில் பாதுகாப்பு படைகள் மற்றும் அரசு சொத்தின் மீது தாக்குதல் 58 சதவீதமாக பதிவாகியுள்ளது.