உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் மீண்டும் பில் கேட்ஸ் முதலிடம்!!

581

Bill Gatesபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசொப்ட் நிறுவனங்களின் தலைவர் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி உள்பட 56 இந்தியக் கோடீஸ்வரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

பில்கேட்ஸ் கடந்த 20 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் உலகின் முதல் பணக்காரராக மகுடம் சூடியுள்ளார். தற்போது 76 பில்லியன் டொலர் சொத்துகளுடன் அவர் மீண்டும் முதலிடம் பெற்றுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனங்களின் அதிபர் முகேஷ் அம்பானி 18.6 பில்லியன் அமெரிக்க டொலருடன் உலகின் 40வது பணக்காரராக உள்ளார்.

அவரது சகோதரர் அனில் அம்பானி 5 பில்லியன் டாலருடன் 281வது இடத்தில் உள்ளார்.

லண்டன்வாழ் இந்தியத் தொழிலதிபர் லஷ்மி மித்தல் 16.7 பில்லியன் டொலருடன் 52வது இடத்திலும், விப்ரோ தலைவர் அஸிம் பிரேம்ஜி 15.3 பில்லியன் டொலருடன் 61வது இடத்திலும், எச்சிஎல் நிறுவன அதிபர் சிவ் நாடார் 11.1 பில்லியன் டொலருடன் 102வது இடத்திலும் உள்ளனர்.