முதலையை பந்தாடிய மலைப்பாம்பு : அதிர்சிக் காணொளி!!

397

Snake

அவுஸ்திரேலியாவில் ஒர் பெரிய முதலையை விழுங்க முயன்ற மலைப்பாம்புக்கும், அந்த முதலைக்குமான போராட்டம் பல மணி நேரம் நடந்துள்ளது.

வியப்புக்குள்ளான இந்த சம்பவம் வடக்கு குயின்ஸ்லாந்து மவுண்ட் இஷா பகுதியில் உள்ள மூண்டாரா ஏரியில் நடைபெற்றது.

10 அடி உயரமுள்ள மலைப்பாம்பு ஒன்று இந்த ஏரியில் உள்ள ஒரு முதலையை கவ்வி பிடித்தது.பதிலுக்கு முதலையும் விடாப்பிடியாக திமிறியது.

இதனால் முதலைக்கும் மலைப்பாம்புக்குமான போராட்டம் ஒரு மணி நேரம் நடந்தது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அந்த காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அதில் ஒருவர் இந்த அற்புதமான காட்சியைப் படம் பிடித்துள்ளார்.

நீரில் ஆரம்பித்த இச்சண்டை நிலத்தில் முடிந்து உள்ளது. மலைப்பாம்ப்பின் பிடியில் இருந்து விடுபட முரட்டு முதலை முயற்சித்த போது பாம்பு தனது பிடியை விடாததால் முதலை சிறுக சிறுக தனது உயிரை இழந்தது. பின்னர் பாம்ப்பு முதலையை தனது வயிற்றுக்குள் தள்ளி உணவாக்கியது.