வவுனியாவில் இதுவரை 10844 பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு : 32 பேருக்கு தொற்று உறுதி!!

1549

இதுவரை 10844 பி.சி.ஆர் பரிசோதனைகள்..

கடந்த மார்ச் 8ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 27ஆம் திகதி வரையில் வவுனியாவில் 10844 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (29.12.2020) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2727 பேருக்குப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

செட்டிகுளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 239 பேருக்குப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கவில்லை.

வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 554 பேருக்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையில் 15 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 380 பேருக்குப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இவற்றைவிட வவுனியா பொது வைத்தியசாலை, பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலை, கைத்திராமணி மற்றும் ஒமேகாலைன் ஆடைத்தொழிற்சாலைகள், வவுனியா பொலிஸ் திணைக்களம் போன்றவற்றிலும் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இனிவரும் காலங்களில் பி.சி.ஆர் பரிசோதனையை அதிகரிப்பதற்கான தீர்மானங்களும் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்டிருந்தது.