பெற்ற குழந்தையை குப்பையில் வீசிய இளம்தாய்!!

328

Baby

அமெரிக்காவில் பெற்ற குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸில் தென் ஹூஸ்டன் என்ற உயர்நிலைப் பள்ளி உள்ளது, இதில் 16 வயது சிறுமி படித்து வந்துள்ளார்.

இவர் தனது அத்தையின் பாதுகாப்பில் வளர்ந்து வந்துள்ளார், அத்தைப் பையனும், சிறுமியும் பலமுறை உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இதில் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார், குழந்தையை பெற்றெடுத்த சிறுமி, பெற்ற குழந்தை என்றுகூட பார்க்காமல் குப்பைத் தொட்டியில் வீசியுள்ளார்.

கூலி தொழிலாளி கார்லோஸ் மைக்கேல் எனபர் குப்பை தொட்டி அருகே நடந்து வந்துகொண்டிருக்கும் போது குழந்தை அழும் சத்தம் கேட்டு, குப்பை தொட்டியில் இருந்து குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளார், குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதன்பின்னர் பொலிசாரின் விசாரணையில், குழந்தையை பெற்றெடுத்த பெண் சிறுமி என்பது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து சிறுமியை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர், வழக்கை விசாரித்த நீதிபதி 7ம் திகதி தீர்ப்பை ஒத்திவைத்துள்ளார்.

இதற்கிடையே தனது குழந்தையை பார்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த சிறுமிக்கு பொலிசார் அனுமதி மறுத்துள்ளனர்.

மேலும் குழந்தையை தாயிடம் கொடுப்பதா அல்லது அரசு காப்பகத்தில் ஒப்படைப்பதா என்பது குறித்து நீதிபதி உத்தரவின் பேரிலேயே முடிவு செய்யப்படுமென பொலிசார் தெரிவித்துள்ளனர்.