3,800 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட பாலாடை கண்டுபிடிப்பு!!

405

China

சீனாவில் சுமார் 3,800 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டதாக கருதப்படும் பாலாடைக்கட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் உள்ள தக்லமாகன் பாலைவனத்தில் பழங்கால மயானம் ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிகளை அகழ்வாராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்தனர்.

அதில் சியாவோ நகரைச் சேர்ந்த அந்தக்கால அழகி மற்றும் சிலர் புதைக்கப்பட்ட சவப்பெட்டிகளில் அவர்களில் உடல்களின் மீது மஞ்சள் நிற துண்டுகள் கிடந்தன.

பரிசோதனையில், சவப்பெட்டியில் இருந்து எடுக்கப்பட்ட மஞ்சள் துண்டுகளில் உள்ள வேதிப்பொருள்களும், பாலாடைக்கட்டியில் இருக்கும் வேதிப்பொருள்களுடன் ஒத்த தன்மை கொண்டவையாக இருந்தன. ஆய்வில், பழங்காலத்தில் இறந்தவர்களில் உடல்களின் மீது பாலாடைக்கட்டி வைத்து அடக்கம் செய்யும் வழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.

இறந்தவர்களுக்கு உணவு தருவது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவை வைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.