சினிமாவுக்கு குட்பை : ரம்யா அதிரடி அறிவிப்பு!!

268

Ramyaசினிமா படங்களில் நடிக்கப்போவதில்லை என்று காங்கிரஸ் எம்பி ரம்யா அறிவிப்பு விடுத்துள்ளார். முன்னணி நடிகை ரம்யா சமீபத்தில் அரசியலில் களம் இறங்கினார். அவர் மண்டியா தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருந்து வருகிறார்.

அவருக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தீவிர அரசியலில் களம் இறங்க வசதியாக, சினிமாப் படங்களில் நடிக்க போவதில்லை என்று ரம்யா அறிவித்து இருக்கிறார்.

பெங்களூரில் நிரூபர்களிடம் பேசிய ரம்யா சினிமாவுக்கு குட்பை சொல்வதாக தெரிவித்தார். மேலும் ஆர்யன் தான் எனது கடைசி படம். அரசியலில் இருந்து கொண்டு சினிமாவில் நடிக்க இயலவில்லை. எனது தொகுதியில் வளர்ச்சி பணிகளை செய்து வருகிறேன்.

இதனால் சினிமாவில் நடிப்பதற்கு கஷ்டமாக உள்ளது. அதற்காக நான் சினிமாவை விட்டு விலகுவதாகவோ அல்லது ஓய்வு பெறுவதாகவோ கருத வேண்டாம்.

ஒரு வேளை வயதான பிறகு மீண்டும் சினிமாவுக்கு வரலாம். நடிகர் சிவராஜ்குமாரின் தங்கையாக நடிக்கலாம். ஆனால், கதாநாயகியாக நடிக்க ஒப்புக் கொள்ள மாட்டேன் என்றம் எனது அரசியல் வாழ்க்கைக்கு ஆதரவு அளிக்கும்படி ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.