வவுனியாவில் இளம் கண்டு பிடிப்பாளர்களை தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யும் நிகழ்வு!!

3162

இளம் கண்டு பிடிப்பாளர்கள்..

வவுனியா மாவட்டத்தின் இளம் கண்டுபிடிப்பாளர்களை தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யும் நிகழ்வு இளைஞர் சேவைகள் மன்றத்தில் இன்று (30.12) இடம்பெற்றது.

மாவட்டத்தில் உள்ள இளைஞர், யுவதிகளின் புத்தாக்கத்தினை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் முகமாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் புத்தாக்க கண்டுபிடிப்புக்களை தெரிவு செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி, செட்டிகுளம், வவுனியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 7 இளம் கண்டு பிடிப்பாளர்கள் தமது கண்டுபிடிப்புக்களை காட்சிப்படுத்தி அது தொடர்பில் விளக்கமளித்திருந்தனர்.

குறித்த கண்டுபிடிப்புக்களில் மூன்று கண்டுபிடிப்புக்கள் மாவட்ட ரீதியில் தெரிவு செய்யப்பட்டு தேசிய போட்டிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் ஐ.சுகானி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதேச விஞ்ஞான தொழில் நுட்ப உத்தியோகத்தர் இ.தபேந்திரன்,

வவுனியா பல்கலைக்கழக வவுனியா வளாக விஞ்ஞான பீட விரிவுரையாளர் எஸ்.கார்த்தீஸ்வரன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வட மாகாண பணிப்பாளர் சிசிரகுமார,

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வவுனியா மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே.ரி.சி.காமினி ஆகியோர் கலந்து கொண்டு இளம் கண்டு பிடிப்பாளர்களை தெரிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.